தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் நடப்பாண்டு உளுந்து விளைச்சல் சரிவால், மார்க்கெட்டுக்கு உளுத்தம்பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மூட்டைக்கு ரூ.1,500 வரை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், விருதுநகர், கோவில்பட்டி, சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும், வட மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உளுந்து சாகுபடி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு அனைத்து பகுதிகளிலும் உளுந்து விளைச்சல் சரிந்துள்ளது.
இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரவேண்டிய உளுந்து வரத்து குறைந்துள்ளது. இதனால் உளுத்தம் பருப்பு விலை கடந்த பிப்ரவரி மாதத்தைவிட நடப்பு மாதம் விலை கூடியுள்ளது. இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் நடப்பாண்டு 25 சதவீதம் உளுந்து விளைச்சல் சரிந்துள்ளது. வழக்கமாக பர்மாவில் இருந்து உளுந்து இறக்குமதி செய்யப்படும். அங்கு நடப்பாண்டு உளுந்து விளைச்சல் குறைந்ததால், இறக்குமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக உளுத்தம் பருப்பு விலை அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 100 கிலோ எடைக்கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டை ரூ.14,500க்கு விற்றது. தற்போது மூட்டைக்கு ரூ.1500 அதிகரித்து, ரூ.16,000 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு மளிகை வியாபாரிகள் கூறினர்.
source : dinakaran

No comments:
Post a Comment