காங்கயம் அருகே, விவசாயி ஒருவரின் தென்னை மரத்தில் 7 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான தேங்காய் காய்த்துள்ளது.
காங்கயம் அருகே, மறவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அலுக்குட்டிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் ஒன்றில் விளைந்த குலையில், ஒரே ஒரு பிஞ்சு மட்டுமே இருந்தது. நாளாக நாளாக பிஞ்சு முதிர்ந்து, வழக்கத்துக்கு மாறாக, மிகப் பெரிய அளவிலான தேங்காயாக உருவானது.
தற்போது இளநீராக இருக்கும் நிலையில் அதைப் பறித்து எடை போட்டபோது அதன் எடை 7 கிலோவாக இருந்தது. சாதாரணமாக இளநீர்த் தேங்காய் 2 கிலோ எடைக்கு அதிகமாக இருக்காது.
இந்த 7 கிலோ எடை கொண்ட அதிசயத் தேங்காயை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
source : Dinamani
No comments:
Post a Comment