Friday, April 1, 2016

தர்மபுரி விவசாயிக்கு சிறந்த பண்ணை இயந்திர பயனீட்டாளர் விருது

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் சிறந்த பண்ணை இயந்திர பயனீட்டாளர் விருதை வழங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஜடையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ெஜகதீசன் விவசாயி. இவர் கடந்த 10 வருடங்களாக துல்லிய பண்ணை முறையில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் துல்லிய பண்ணை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் ஜெகதீசன் துல்லிய பண்ணை திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்தார். 

பண்ணையில் வேலையாள் பற்றாக்குறையை போக்குவதற்காக பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாட்டை தனது விவசாய பண்ணையில் ஜெகதீசன் துவக்கினார். சொட்டுநீர் பாசனம் மூலம் உரமிடுதலுக்கு ஆள்தேவை குறைந்தது. ஜெகதீசன் ஒருவரே நீர் மற்றும் உர மேலாண்மையை மேற்கொண்டு வந்துள்ளார். மாட்டில் இருந்து பால் கறப்பதற்கும் இயந்திரம் பயன்படுத்துவதால் நேரம் குறைந்துள்ளது. மாட்டுக்கொட்டகையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க சிறிய மழைதூவானை பயன்படுத்தினார். தீவன புற்களை அறுவடை செய்யவும், தீவன பயிர்களை நறுக்கவும் நவீன கருவியை பயன்படுத்தினார். 

இந்நிலையில் பண்ணையில் இயந்திர பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மஞ்சள் அறுவடை செய்யும் கருவியை அவரே உருவாக்கியுள்ளார். இதன் மூலம் 60 சதவீத வேலையாட்கள் பயன்பாடு குறைந்துள்ளது. அதிகளவில் பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஜெகதீசன் பயன்படுத்தி வேலையாட்களை அதிகம் சார்ந்து இல்லாமல் சிறந்த முறையில் விவசாயம் செய்து வரும் ஜெகதீசனுக்கு தமிழ்நாடு வேளாண் பல்லைகழகம் 2015-16க்கான சிறந்த பண்ணை இயந்திர பயனீட்டாளர் விருதை வழங்கி கவுரவித்தது.இதையடுத்து தர்மபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் ஜெகதீசனை பாராட்டினர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment