தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது. இதில் மசாலா பொடிகள், பாகற்காய் ஊறுகாய், தயார்நிலை பேஸ்ட், கத்திரிக்காய் ஊறுகாய், காளான் ஊறுகாய், வெங்காய ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் ரூ.1500ஐ வேளாண் பல்கலையில் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஏப்.5ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்கள் அறிய 0422-6611340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : dinakaran
Source : dinakaran
No comments:
Post a Comment