Sunday, April 3, 2016

ஒற்றை தென்னையில் ஒன்பது கிளைகள்: வேளாண் துறை அதிகாரிகள் வியப்பு


தஞ்சாவூர் அருகே, ஒரு தென்னை மரத்தில், ஒன்பது கிளைகள் உள்ளது, அப்பகுதி மக்களை மட்டுமின்றி, வேளாண் துறை அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்; இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில் மா மரம், பலா மரம், வாழை மரம் மற்றும், 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இவர்கள் தோப்பில் உள்ள ஒரு தென்னை மரத்தின் தலை பகுதியில், கடந்த ஆண்டு, ஒரு கிளை வெடித்து, அதிலிருந்து இரண்டு கிளைகள் முளைத்தன. அதன் பின், அந்த மூன்று கிளைகளில் இருந்தும், தலா, இரண்டு முளைத்து, தற்போது ஒரே தென்னை மரத்தில், ஒன்பது கிளைகள் வளர்ந்து உள்ளன. அனைத்து கிளைகளிலும், பாலை விட்டு காய்கள் காய்ப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு மரத்தில், இரண்டு கிளைகள் இருக்கும். அதிலும் ஒரு கிளை தான் காய்க்கும். இதில், மூன்று கிளைகள் முளைத்து, அதிலிருந்து தலா, இரண்டு கிளைகள் வந்து ஒவ்வொன்றும் காய்ப்பது அதிசயமாக உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்து உள்ளோம். ஆய்வு பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment