Friday, April 1, 2016

ஏப். 5-ல் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்


பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப். 5-ம் தேதி பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது என்றார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிரவன்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஏப். 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பயிர்க் காப்பீட்டு திட்டம் குறித்த விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்துக் காட்சியும் இடம்பெற உள்ளது. முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் மையத்துக்கு ஏப்.5-ம் தேதி காலை நேரில் வரலாம். விவரங்களுக்கு 04328-293251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinamani

No comments:

Post a Comment