Friday, April 1, 2016

தானிய ஈட்டுக்கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு


மாவட்ட கூட்டுறவு கிடங்குகளில் நெல் உள்ளிட்ட தானியங்களை ஈடு வைத்து, கடன்பெற்று பயன்பெறலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் 157 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மற்றும் பண்டக சாலை உள் கட்டமைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 230 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 கிடங்குகள், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 கிடங்குகள், 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 கிடங்கு கட்டப்பட்டுள்ளன.

source : Dinamani

No comments:

Post a Comment