தஞ்சாவூர் மாவட்டத்தில்
சூரிய சக்தி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்
மூலம் வேளாண் விளைபொருள்களை சூரிய சக்தியை உபயோகித்து உலர்த்தி பயன்படுத்துவதற்காக
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 2015-16 ஆம் நிதியாண்டுக்கு இரண்டு சூரிய கூடார
உலர்த்தி அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
விவசாயிகள் தங்களது சொந்த
இடத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் வழிகாட்டுதலின்படி, சூரிய கூடார உலர்த்திகளை
அமைத்துக் கொண்டு அரசு மானியம் பெறலாம். ஒரு சூரிய கூடார உலர்த்தி 400 சதுர அடியில்
அமைப்பதற்கு அரசு மானியமாக ரூ.1.21 லட்சம் முதல் ரூ. 1.84 லட்சம் வரை கிடைக்கும்.
சூரிய கூடார உலர்த்திகள்
மூலம் விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருள்களான கொப்பரை தேங்காய், வாழைப்பழம்
மற்றும் இதர காய்கறிகளை உலர்த்தி பதப்படுத்தி வைத்துக்கொண்டு சந்தையில் கூடுதல் விலை
கிடைக்கும்போது விற்பனை செய்யலாம். இவ்வகை உலர்த்திகளில் காயவைக்கப்படும் வேளாண்
விளைபொருள்கள் நிறம், தரம் மற்றும் சுவை குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. இத்திட்டத்தின்
முலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படம், நிலவரைபட
நகல், அடங்கல் மற்றும் கணினி சிட்டாவுடன் பட்டுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை உதவி
செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் அளித்து மூதுரிமை அடிப்படையில்
சூரிய கூடார உலர்த்திகளை அமைத்துக் கொள்ளலாம் என வேளாண்மை பொறியியல் துறை சார்பில்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment