Monday, October 19, 2015

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்


புதுக்கோட்டை மாவட்ட விவசாயப் பணிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகள் மானியவிலையில் விநியோகிக்கப்படுவதாக வேளாண் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுகை வேளாண் இணை இயக்குநர் த. சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது நிலவி வரும் வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கு வகையில், பருவத்தில் வேளாண் சாகுபடிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் சாகுபடிச் செலவைக் குறைக்கவும் வேளாண் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் பவர்டில்லர், ரோட்டோ வேட்டர், விதைப்புக் கருவிகள் ஆகியவைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் மானிய விலையில் பவர்டில்லர் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சிறு, குறு, ஆதிதிராவிடர், மகளிர் விவசாயிகளுக்கு கருவியின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரமும். இதர விவசாயிகளுக்கு கருவியின் அடிப்படை விலையில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரமும். தேசிய உணவுப் பாதுகாப்பு (பயறு) திட்டத்தில் ரோட்டோவேட்டர் கருவி சிறு, குறு, ஆதிதிராவிடர் மகளிர் விவசாயிகளுக்கு கருவியின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 63 ஆயிரமும். இதர விவசாயிகளுக்கு கருவியின் அடிப்படை விலையில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரமும். விதைப்புக் கருவிகள் சிறு, குறு, ஆதிதிராவிடர் மகளிர் விவசாயிகளுக்கு கருவியின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 19 ஆயிரமும். இதர விவசாயிகளுக்கு கருவியின் அடிப்படை விலையில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரமும் வழங்கப்படும்.
எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து விலைப்புள்ளி பெற்று மானியத் தொகை கழித்து விவசாயிகளின் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக உரிய சான்றுகளுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு தேவையான விவசாயக் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.


http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2015/10/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/article3087645.ece

No comments:

Post a Comment