பெரம்பலூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 746 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மக்காச்சோளம் சாகுபடி
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் உழவுப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பயிரான மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி அதிக ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பருத்திக்கு உரிய விலை கிடைக்காததாலும், பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததாலும், விவசாயிகள் பருத்தி சாகுபடியில் இருந்து மக்காச்சோளம் சாகுபடிக்கு மாறி உள்ளனர்.
பராமரிப்பு செலவு குறைவு
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் மானாவாரியாக இருப்பதாலும், 4 மாதங்களில் முற்றிய கதிர்களாக அறுவடை செய்யப்படும் மக்காச்சோளத்திற்கு பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும் ஆண்டுக்கு ஆண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்காக மக்காச்சோளம் கொள்முதல் அதிகம் செய்யப்பட்டு வருவதால், வேப்பந்தட்டை, வேப்பூர் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாயிகள் என்.கே. டி.கே.சி. தானியா, பயனியர் போன்ற ரக மக்காச்சோளத்தை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
35 ஆயிரத்து 746 எக்டேர் பரப்பளவில்...
நடப்பு பருவத்தில் 35 ஆயிரத்து 746 எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 35 ஆயிரத்து 300 எக்டேர் பரப்பளவில் மட்டுமே மக்காச்சோளம் சாகுபடி நடந்தது. இது தவிர நெல் 516 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 18ஆயிரத்து 482 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் ஆயிரத்து 919 எக்டேர் பரப்பளவிலம், கரும்பு 4ஆயிரத்து 859 எக்டேர் பரப்பிலும், மரவள்ளிக்கிழங்கு ஆயிரத்து 720 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.
Source: Daily thanthi

No comments:
Post a Comment