நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருந்து,
மறைந்து போன சாண வறட்டிக்கு, வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்துஉள்ளது. 'ஆன்லைன்'
விற்பனையிலும் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்தியாவில், அடுப்பு எரிக்க விறகுக்கு
அடுத்தபடியாக, மாட்டுச் சாணத்தில் தயாரான வறட்டிகள், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
வீட்டில் மாடு வளர்க்காதவர்கள், அவற்றை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.ஆனால்,
காஸ் சிலிண்டர் அறிமுகமான பிறகு, வறட்டியின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து, இப்போது
மறைந்தே போய் விட்டது. யாகங்கள், ஹோமங்களுக்கு மட்டுமே இப்போது வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.அதேபோல்,
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்போது, வறட்டி பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆன்லைன்
மூலம் வறட்டி வாங்கி உபயோகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் வசித்தாலும், மரபுகளை பின்பற்றிவரும் பலர், பூஜை, ஹோமம் போன்றவற்றை நடத்துகின்றனர். அவர்களின் தேவையை உணர்ந்த, ஆன்லைன் வர்த்தக இணைய தளங்கள் சில, வறட்டிகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளன.இதை பார்த்த நமது ஊர் மக்களும், ஆன்லைனில் வறட்டிகளை ஆர்டர் செய்யத் துவங்கியுள்ளனர். நான்கு வறட்டிகள், 40 ரூபாய்க்கு விற்கப்டுகின்றன. இதை, ஏராளமானோர் விரும்பி வாங்குகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து இயங்கும், 'அமேசான்.காம்'
வர்த்தக இணைய தளம், இதை வெளிநாட்டில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.இதைப்
பார்த்து, இந்திய இணைய தளங்களும், வறட்டி விற்பனையில் களம் இறங்கியுள்ளது. cowdungcake
sale என்று, டைப் செய்து, இணையத்தில் தேடினால், விற்பனை
செய்யும் இணைய தளங்களை கண்டறிந்து, வறட்டிகளை வாங்கலாம்.
No comments:
Post a Comment