திண்டுக்கல்: தமிழகத்தில் பயிர் வளர்ச்சிக்கு 'வேப்பெண்ணெய் கலந்த யூரியா'
(நீம் கோட்டட் யூரியா) உரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நெல், கரும்பு, பயறு வகை பயிர்களின்
வளர்ச்சிக்கு மிக அவசியமானது தழைச்சத்து. யூரியாவில் 46 சதவீதம் தழைச்சத்து உள்ளது.
யூரியாவானது 'அமோனியா' என்ற வேதிப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுவதால், காற்றில் கரையும்
தன்மை அதற்கு உள்ளது.
யூரியாவில் உள்ள தழைச்சத்து ஆவியாகும் என்பதால், அதனை
பயிர்களுக்கு இடும்போது 20 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய
மத்திய அரசு யூரியா உற்பத்தி செய்யும் நிறுவனங்களை, 'நீம் கோட்டட் யூரியா'வாக (வேப்ப
எண்ணெய் கலந்த யூரியா) தயாரிக்குமாறு அறிவுறுத்தியது.யூரியா தயாரிக்கும் நிறுவனங்கள்,
85 சதவீத அளவிற்கு வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவாக தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வேளாண் இணை இயக்குனர் சம்பத்குமார், உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது: வேப்பெண்ணெய் யூரியாவை பயன்படுத்தினால், பயிருக்கு இடும் உரத்தின் அளவில் 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்து இடலாம். மேலும், மண் மூலம் பரவும் நோய்கள், பூச்சிகள் மற்றும் புழுக்களுக்கு எதிராக யூரியா உரம் செயல்பட்டு பயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
சாதாரண யூரியாவை காட்டிலும், வேப்ப எண்ணெய் கலந்த யூரியா சிறப்பான பயனளிக்கும். இனி வரும் காலங்களில் விவசாயிகள் வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவை வாங்கி பயன்படுத்தலாம். இதனை 50 கிலோ மூடை ரூ.284 க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (சாதாரண யூரியா மூடை ரூ.270).மேலும், விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் கிடங்கியில், இவற்றின் இருப்பு தொகையை அறிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment