தேனி,: தேனி வட்டாரத்தில் நடவு செய்துள்ள நெல் பயிரில்
பருவநிலை மாற்றத்தால் புகையான் தாக்குதல் ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, நெல்
நடவு செய்துள்ள விவசாயிகள் 8 அடிக்கு ஒரு அடி பட்டம் விட்டு, பயிர்களை ஒதுக்கி விட
வேண்டும். நீர்பாசனத்தில் காய்ச்சலும், பாய்ச்சலுமாக நிலத்தை வைத்திருக்க வேண்டும்.
நெல்லுக்கு மேல் உரமாக தழைச்சத்து இடுவதை பிரித்திட வேண்டும். புகையான் பூச்சி தாக்குதல்
அறிகுறியாக நெல் பயிர் தூரின் அடிப்பாகத்தில் சிறிய "பிரவுன்' கலரில் தத்து பூச்சிகள்
கூட்டமாக காணப்படும். இவை பயிரின் சாற்றை உறிஞ்சுவதால் பயிர்கள் தீயில் கருகியது போல்
ஆங்காங்கே பரவலாக காணப்படும். ஒரு தூருக்கு 2 பூச்சிகள் சிலந்தி அல்லது ஒரு தூருக்கு
ஒரு பூச்சி சிலந்தி இருக்கும் வயலில் பயிர் பாதுகாப்பு செய்ய தேவையில்லை. அதற்கு மேல்
இருக்கும் பட்சத்தில் "குளோரி பைரிபாஸ்' 20 சதவீதம் இ.சி. 125 மில்லி ஒரு ஏக்கருக்கு
தூரில் நன்றாக நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம், என தேனி வேளாண்மை உதவி இயக்குனர்
முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment