வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் கடந்த ஆண்டு
கடல் நீர் உள்புகுந்ததால் பாதிக்கப்பட்ட 1340 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி
தொடங்கியுள்ளது.
அளவளஞ்சான் கரை பலப்படுத்தும் பணியால் இறால் பண்ணைகளுக்கு
கடல் நீர் எடுக்கப்படும் பகுதி வழியே விளைநிலத்தில் உப்பு நீர் உள்புகுந்தது. இதனால்
தலைஞாயிறு 1,2,3 மற்றும் 5 சேத்தி, மகாராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி
முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பயிர் பாதிப்புக்கு நிவாரணமும்,எதிர்காலத்தில்
உப்பு நீர் உள்புகாமல் தடுக்கவும் நடவடிக்கைக் கோரி விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், பயிர் பாதிப்புக்கான நிவாரணத் தொகை
அந்ததந்த பகுதி வேளாண் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதை சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி.காமராஜ் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சோமு. இளங்கோ கூறியது:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
எடுத்த தமிழக அரசுக்கு நன்றி.
அதேநேரத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பை தடுக்க
பழையாற்றங்கரை பகுதி கரையில் இருந்து லாப்டிகரை வரையில் கரை அமைக்க வேண்டும், அளவளஞ்சான்
கரை பகுதியை ஆய்வு செய்து நிரந்தரமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment