கூடலூர்
கூடலூர் அருகே தோட்டக்கலை பண்ணையில் செயல்பட்டு வரும் பூங்காவுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
பூங்கா கேரள– கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் கூடலூர் அமைந்துள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் உள்ளதா? என விசாரிக்கிறார்கள். ஆனால் சுற்றுலா திட்டங்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இதையொட்டி தமிழக அரசு உத்தரவின் பேரில் கூடலூர் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பண்ணையில் கடந்த ஜூன் மாதம் 25 சென்ட் நிலத்தில் ரூ.20 லட்சம் செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறக்கப்பட்டது. இதற்காக பாலிதீன் கொண்டு மூடப்பட்ட 2 ராட்சத குடில்கள் அமைக்கப்பட்டன. மேலும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு விருப்பமான ஜனியா, சூரியகாந்தி, அஜிரேட்டம், வெர்பினா, சப்னேரியா குரோட்டேரியா, மொட்டு ரோஜா, சால்வியா உள்பட பல்வேறு ரக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
வரத்து அதிகரிப்பு இதேபோல் வண்ணத்துப்பூச்சிகள் உள்ள குடில்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான காலநிலை நிலவுகின்ற வகையிலும் 2 செயற்கை நீரூற்றுகள் மற்றும் புல்வெளி தளங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் வண்ணத்து பூச்சிகள் எதுவும் இல்லாமல் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் மோனார்க், எல்லோடெய்ல், பிளாக்ஐ உள்பட சில வகையை சேர்ந்த வண்ணத்து பூச்சிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரே இடத்தில் பல வண்ணத்துப்பூச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டித்து ரசித்து செல்கிறார்கள். இதேபோல் பள்ளிக்கூட மாணவ– மாணவிகள் கல்வி சுற்றுலாவாக வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். வண்ணத்துப்பூச்சிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இனப்பெருக்கம் இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும் போது, தற்போது, பூங்காவுக்கு வண்ணத்துப்பூச்சிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வண்ணத்துப்பூச்சிகள் பிடித்தமான தாவரங்களில் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இனி வரும் காலங்களில் இன்னும் அதிகளவு வண்ணத்துப்பூச்சிகள் பூங்காவில் வாழ்விடங்களை அமைத்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தனர்.
Source: Daily thanthu

No comments:
Post a Comment