பழநி:பழநி பகுதியில் யூரியா தழைச்சத்து உரத்திற்கு பதிலாக, குறைந்த செலவில் மண்வளத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் இயற்கை பசுந்தாள் தக்கைப்பூண்டுகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது பழநி பகுதியில் குறிப்பிட்ட அளவு மழைபெய்துள்ளதால், விவசாயிகள் வயலை உழுது, சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக நெற்பயிர் வளர தழைச்சத்து உரமாக விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். விபரமான சில விவசாயிகளோ இயற்கை பசுந்தாள் உரமான தக்கைபூண்டு செடிகளை சாகுபடி செய்துள்ளனர். விவசாயி பாலமுருகன் கூறியதாவது: யூரியா ஒரு மூடை ரூ.285 முதல் 300வரை விற்கிறது. ஒரு ஏக்கருக்கு 3 மூடை அதாவது ரூ.1000 வரை செலவாகும்.
அதேசமயம் இயற்கை பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதை ஒரு கிலோ ரூ.90. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதைத்தால் 40 நாட்களில் நன்றாக வளர்ந்து 16 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும். அவற்றை அப்படியே மடக்கி உழுது மண்ணில் மக்கச்செய்து, 10 நாட்களுக்குப்பின் நெல் நாற்றுகளை நடவு செய்வார்கள். தக்கைபூண்டு வளரும்போது புற்கள், இதரசெடிகளும் உடன் வளர்ந்துவிடும். அவை மடக்கி உழவு செய்தபின், நெற்பயிர் உடன் அவ்வளவாக களைச்செடிகள் வளரவாய்ப்பு இல்லை. அந்த செலவு சேமிப்பாகும்.
ஏற்கனவே வேளாண்துறை சார்பில் தக்கைபூண்டு விதை வழங்கப்பட்டது. தற்போது வயலின் ஒருபகுதியில் தக்கைப்பூண்டு விதைக்க பரிந்துரைசெய்கின்றனர். அதிக நாட்கள் ஆகும் என்ற காரணத்தால் சில விவசாயிகள் மட்டுமே இம்முறையை பின்பற்றுகின்றனர், என்றார்.

No comments:
Post a Comment