திருப்புத்தூர்:திருப்புத்தூர் வட்டார விவசாயிகள் தங்கள் நெல் பயிரை தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் டிச.15 க்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண் உதவி இயக்குநர் சர்மிளா அறிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:பயிர்க்கடன் பெறும் அனைத்து சிறிய, பெரிய விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.149 கட்டணம் செலுத்தியும், கடன் பெறாத சிறு மற்றும் மிகச்சிறு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.134 காப்பீடுக் கட்டணம் செலுத்தவேண்டும்.
விவசாயிகள் பகுதியிலுள்ள தொ.வே.கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம். வி.ஏ.ஓ. அடங்கல் சான்றை விண்ணப்பித்துடன் இணைத்து தொ.வே.கூ.வங்கியில் அளிக்க வேண்டும். பயிர் விதைத்து ஒரு மாதம் அல்லது டிச.15 இதில் எது முன்னதோ அதற்குள் கட்ட வேண்டும். பிர்க்கா அளவில் பாதிப்பு கணக்கிடப்பட்டு, நெல் பயிருக்கு மூன்று வருடம் சராசரி மகசூல் அடிப்படையில் இழப்பீடுத் தொகை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு திருப்புத்தூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment