Monday, October 19, 2015

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு ஆலோசனை


சங்கராபுரம் அருகே மாதிரி கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி கிராமமாக, சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்துக்கு திங்கள்கிழமை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரத்தினசபாபதி, மாவட்ட உதவி இயக்குநர் சண்முகம் ஆகியோர் வந்தனர். இவர்கள்
விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
 இயற்கை வேளாண் முறையை கடைப்பிடிக்க வேண்டும். மண்புழு உரம், பசுந்தாள் உரப் பயிர்களான தக்கப்பூண்டு, சனப்பை, அவுரி ஆகியவற்றைப் பயிரிட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டிடும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 அப்போது வட்டார வேளாண்மை அலுவலர் விஜயகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துக்கருப்பன், அப்பாஸ், நாசர், மைக்கேல், ஜெயப்பிரதா, பழனிவேல், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2015/10/20/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/article3089374.ece


No comments:

Post a Comment