புதுடெல்லி,
விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து ஏற்கனவே 5 ஆயிரம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு இறக்குமதி செய்து உள்ளது. இந்த நிலையில், மேலும் 2 ஆயிரம் டன் துவரம் பருப்பையும், ஆயிரம் டன் உளுந்தம் பருப்பையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படும்.
டெல்லியில் மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வேளாண்மை, நுகர்வோர் விவகாரம், வர்த்தக துறை செயலாளர்களும் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
டெல்லியில் அரசு விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 4 நாட்களில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200 குவிண்டால் துவரம் பருப்பு கிலோ ரூ.120 விலையில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment