Monday, October 19, 2015

வேளாண் உற்பத்தியில் ஆப்பிரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்; மத்திய மந்திரி சுரேஷ் பாபு தகவல்


புதுடெல்லி,

இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு வரும் 26-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், வேளாண் உற்பத்தியில் ஆப்பிரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா அதிக விருப்பத்துடன் உள்ளதாக மத்திய மந்திரி சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று டெல்லியில் அசோசெம் நடத்திய கூட்டத்தில் அவர் பேசியவை பின்வருமாறு:- 

ஆப்பிரிக்காவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியா 120 கோடி மக்கள்தொகையை கொண்டது. பொருளாதார ரீதியில் வேளாண்மை துறை மற்றும் தொழிற்துறையில் இந்தியா-ஆப்பிரிக்கா இணைந்து செயல்பட அதிக வாய்ப்புள்ளது. தனியார் மட்டுமில்லாது அரசுத்துறைகளிலும் ஆப்பிரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது. வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியாதான். வேளாண் உற்பத்தியில் இருநாடுகளும் இணைந்து செயல்பட அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஆப்பிரிக்காவுடன் தற்போது இந்தியா 75 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்காவில் 7.4 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்தியா உதவியுடன் கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது. 41 ஆப்பிரிக்க நாடுகளில் 137 பிராஜக்ட்டுகள் இந்தியாவால் நிறைவேற்றப்பட்டுள்ளன


  

No comments:

Post a Comment