Monday, October 19, 2015

காய்கறி பயிரில் அதிக மகசூல் வேளாண் துறை ஆலோசனை



திருவள்ளூர் : குறைந்த தண்ணீரில், காய்கறி பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட மூத்த வேளாண் அலுவலர் ஞானசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், மழையின்மையால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. காய்கறி விதைத்த பின், தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில், குறைந்த தண்ணீரைக் கொண்டு காய்கறி பயிர் சாகுபடி செய்து, அதிக லாபம் பெறலாம். இதற்காக விவசாயிகள், காய்கறி விதைகளின் முளைப்பு திறனை அறிந்து பயிரிட வேண்டும்.எனவே, விவசாயிகள் தாங்கள் பயிரிட விரும்பும் வெண்டைக்காய், சுரைக்காய், பூசணி, வெள்ளரி, தர்பூசணி, விதைகளில், 100 கிராம் மற்றும் கீரை, தக்காளி, கத்திரி, மிளகாய் விதைகளில், 10 கிராம் வீதம் மாதிரி எடுத்து, திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை ஆய்வகத்தில் அளித்து, முளைப்பு திறனை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment