அரியலூர், : வாழைக்கன்றில்
எப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள்
செயல் விளக்கமளித்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி கிரீடு வேளாண்
அறிவியல் மையத்தில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும்
ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து விவசாய கண்காட்சி மற்றும் பயிற்சி முகாமினை
நடத்தினர். இதில் காளாண் வளர்ப்பு, வாழைக்கன்று நேர்த்தி, நெல்விதை நேர்த்தி, முருங்கையில்
புடலை ஊடு பயிர், அசோலா உற்பத்தி, பாலீத்தின் பயன்படுத்தி களையை கட்டுப்படுத்துதல்,
இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்துல், பாலீத்தின் தொட்டியில் சாண எரிவாயு உற்பத்தி செய்தல்,
ஒருங்கினைந்த பண்ணை தொழில் நுட்பம், தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தி பூந்தோட்டம்
அமைத்தல், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி, திருந்திய நெல்சாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல்,
இலைக்கரைசல் தயாரித்து பயன்படுத்தும் முறை, காய்ப்புழு கட்டுப்படுத்தும் முறை போன்ற
பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இக்கண்காட்சியை கிரீடு அறிவியல்
நிலையத்தின் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மண்ணியியல் பேராசிரியர்
பாஸ்கர்,
பயிர் பெருக்கம் துறையைச் சேர்ந்த சுரேஷ், தோட்டக்கலை பேராசிரியர் முருகானந்தம் மற்றும் வேளாண் விரிவாக்கம் துறையைச் சேர்ந்த ராஜ்கலா ஆகியோர் கலந்து கொண்டு மண்வளத்தை அதிகரித்தல், இயற்கை விவசாயம் பற்றி அறிவுரைகளையும் பரிந்துரைகளையும் கூறினர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

No comments:
Post a Comment