Friday, July 22, 2016

ஆடிப் பட்ட விதைப்புக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்

தேனி மாவட்டத்தில் ஆடிப் பட்ட விதைப்புக்கு, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் மானிய விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
   இது குறித்து, மாவட்டத் தோட்டக் கலை துணை இயக்குநர் ஜெ. கிஷோர்குமார் கூறியது: காய்கறி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஜூலை 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஆடிப் பட்ட விதைப்புக்கு அவரை, புடலை, பீர்க்கங்காய், பாகற்காய், முருங்கை, கீரை வகைகள் கொண்ட விதை பாக்கெட் ரூ. 10 மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
  மேலும், அரசு தோட்டக்கலை பண்ணையில் குழித்தட்டு நாற்றாங்கல் முறையில் வளர்க்கப்பட்ட வீரிய ரக தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள், சின்ன வெங்காயம் விதை ஆகியன விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகின்றன.
  காய்கறி நாற்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment