Tuesday, July 19, 2016

பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு மானியம்

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட உள்ளன. திருச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண் வளத்தினை பெருக்கிட பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுது நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு அதிகபட்ச மானியம் ரூ1,500 வீதம் பின்னேற்பு மானியமாக 2,400 எக்டருக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் திருச்சி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. 
 
விவசாயிகள் தரமான பசுந்தாள் உரப்பயிர்களான தக்கை பூண்டு, சணப்பு ஆகியவற்றின் விதைகளை ஒரு எக்டருக்கு 50 கிலோ வீதம் விதை விற்பனை நிலையங்களிலிருந்து பெற்று வயலில் விதைத்து அதற்கான பட்டியல், வங்கி விபரம், பசுந்தாள் சாகுபடி செய்யப்பட உள்ள வயலின் புகைப்படம் மற்றும் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
இது குறித்து திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், பசுந்தாள் உர பயிர்களின் விதைகள் 50 கிலோவிற்கான  கொள்முதல் தொகையில் 50 சதம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ1,500 வீதம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக இரு எக்டருக்கான மானியத்தை பெறலாம்.  எனவே இத்திட்டத்தினை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு பயிர்களை தங்கள் வயலில் சாகுபடி செய்து மண் வளத்தை செறிவூட்டி , ரசாயண தழைசத்து உரங்களின் தேவையை குறைத்து நெற் பயிரில் அதிக மகசூல் பெற்றிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment