Wednesday, April 20, 2016

உளுந்து சாகுபடி செய்ய வழிமுறை வேளாண் அதிகாரி விளக்கம்

பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது: 
தஞ்சை மாவட்டம் பூதலூர் வேளாண்மை வட்டாரத்தை சேர்ந்த கூத்தூர், விட்டலபுரம், பவனமங்கலம், விஷ்ணம்பேட்டை, அலமேலுபுரம், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, தோகூர், கச்சமங்கலம், பாதிரகுடி, பழமார்நேரி, திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்துவேலி போன்ற கிராமங்களில் பம்புசெட் மூலம் சித்திரைபட்ட உளுந்து சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஏற்றதாக 62 நாள் வயதுடைய கான்பூர் ரகமான ஏடிடி 5 ரகத்தை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பயிரின் வளர்ச்சி காலத்தில் விதைகள் மூலம் நோய் பரவாமல் தடுக்க விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் உரம் 200 கிராம் எடுத்து அதில் 160 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்த விதையுடன் கலந்து 24 மணிநேரம் நிழலில் உலர்த்தி வைத்து பின் விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை உழவு செய்து வயலை நன்கு சமப்படுத்தி மக்கிய தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 5 டன் வீதம் வயிலில் பரப்பி விட வேண்டும். 30 செமி இடைவெளியில் பாத்தி அமைத்து, செடிக்கு செடி 10 செமி இருக்குமாறு களைக்கொத்து மூலம் கொத்தி 2 விதைகள் இட்டு மண்ணால் மூடவேண்டும். 

ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். அதிக மகசூல் பெற இது மிக அவசியம். விதைப்பு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சி, 3 நாட்கள் கழித்து 2வது தண்ணீர் விடவேண்டும். பின் தேவைக்கு ஏற்ப பூக்கும் தருவாயிலும், காய்க்கும் தருவாயிலும் அவசியம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றார்.பெயிண்டர் மனைவி, மகன் மாயம்
தஞ்சை, : அம்மாபேட்டை அருகே பெயிண்டரின் மனைவி, மகனை காணவில்லையென போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே ராராமுத்திரைக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திர பிரபு. பெயிண்டர். இவரது மனைவி வீரலட்சுமி (25). மகன் ஜோஸ்வா தரூண்(3). கடந்த 12ம் தேதி மகேந்திரபிரபு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது மனைவி வீரலட்சுமி, மகன் ஜோஸ்வாதரூண் இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை என்பதால் மகேந்திரபிரபு நேற்று அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

source : Dinakaran

No comments:

Post a Comment