Tuesday, April 12, 2016

குமரியில் தனியார் நர்சரிகளுக்கு விதை ஆய்வு இணை இயக்குநர் எச்சரிக்கை

 நாகர்கோவில் விதை ஆய்வாளர் ஜோஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  குமரி மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக  கோவை விதை ஆய்வு இணை இயக்குநர் பாண்டியராஜன் வந்தார். கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில்  உள்ள தாய்மர செடிகளை பார்வையிட்டு,  உரிய விதை விற்பனை உரிமம் பெற்று இயங்கி வருவது குறித்து ஆய்வு செய்தார்.  அரசு, அரசு சார்பு, தனியார் விதை விற்பனை நிலையங்கள் உரிமம் பெற்று இயங்கி வருவது  குறித்தும்,  உரிய பதிவேடுகள் தொடர்ந்து பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார்.  தனியார் நர்சரிகள் உரிய உரிமம் இன்றி  உணவிற்காக பயன்படுத்தப்படும்  பழமரக் கன்றுகள்  விற்பனை செய்தால் விதை சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

source : dinakaran

No comments:

Post a Comment