Friday, April 22, 2016

நெல்லியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 27, 28 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் நெல்லி பானங்கள், பழரசம், தயார் நிலை பானம், நெல்லிக்காய் ஜாம், அல்வா, பட்டர், கேண்டி மிட்டாய், பொடி, துருவல் தயாரிப்பு முறைகள், தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்குரிய வழிமுறைகள் கற்றுத் தரப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள் பயிற்சி கட்டணத்தை வரைவோலை மூலம் பேராசிரியர், தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை என்ற பெயரில் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து, மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பதிவு செய்து கொள்ள இறுதி நாள் ஏப்ரல் 27. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0422-6611340, 6611268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source : Dinamani

No comments:

Post a Comment