Tuesday, December 29, 2015

தகவல் துகள்கள்: சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சும் மின் பலகை!



சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்பலகைகளை, எந்த திசையைப் பார்த்தபடி வைக்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனெனில் அதைப் பொறுத்தே, மின்பலகைகள் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பது முடிவாகும்.ஆனால், சவூதியிலுள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தைவான் தேசிய மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, ஒரு புதிய பொருள் அந்த நிலையை மாற்றக்கூடும்.சிலிக்கா என்ற பொருளைக்கொண்டு, இந்த விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ள ஒரு புதிய பொருளை, சூரிய மின்பலகை மீதுள்ள கண்ணாடியில் பூசிவிட்டால், அது, சூரிய ஒளி எந்த திசையில் இருந்தாலும், பெரும்பாலும் ஈர்த்துக்கொள்ளக்கூடியது என்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.நேனோ அளவில், தேன்கூடு போன்ற 
கட்டமைப்பைக் கொண்டிருக்கும் சிலிக்கா பூச்சு, கிடைக்கும் சூரிய ஒளியை, பலகை மீது திசை திருப்பி, 5.2 முதல் 27.7 சதவீதம் வரை அதிக மின் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு சூரிய ஒளி மின் தயாரிப்பு திட்டம் போடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளையும், மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியாவின் மின் பற்றாக்குறை கணிசமாகக் குறையும்.

Source : Dinamalar

No comments:

Post a Comment