Wednesday, December 23, 2015

செவ்விளநீர் தென்னைகன்றுகள் நடவு அதிகரிப்பு

பெரியகுளம்,:பெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்ட 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் இளநீர் மற்றும் தேங்காய் விளைச்சல் தரும். 45 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் வெட்டப்படுகிறது. ஒருமரத்தின் வாழ்நாள் 70 ஆண்டுகளாகும். தற்போது பெரியகுளம் பகுதியில் குறுகிய காலத்தில் பலன்தரும் செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுவது அதிகரித்துள்ளது. 
இவை நடவு செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் பலன் கொடுத்து விடும். இவ்வகை தென்னை மரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை இளநீர் வெட்டப்படுகிறது. மரத்தின் வாழ்நாள் 35 ஆண்டுகளாகும். இந்தவகையான மரங்களில் இளநீர் மட்டும் கிடைக்கும். இளநீர் ஒன்று 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறைந்த ஏக்கர் நிலப்பரப்பு உள்ளவர்கள் கூட அதிகளவில் செவ்விளநீர் தென்னங்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். 

Source : Dinamalar

No comments:

Post a Comment