Wednesday, December 23, 2015

1,900 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்தது

சென்னையில் இருந்து சரக்குரெயிலில் 1,900 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்தது.

பொட்டாஷ் உரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உரம், காம்ப்ளக்ஸ் உரம் ஆகியவை வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக சென்னை துறைமுகத்தில் இருந்து பொட்டாஷ் உரமூட்டைகள் சரக்குரெயிலில் ஏற்றப்பட்டு, தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டன. தஞ்சை ரெயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் ஏற்றப்பட்ட சரக்குரெயில் நேற்றுமுன்தினம் இரவு வந்து சேர்ந்தது. மொத்தம் 31 வேகன்களில் 1,900 டன் பொட்டாஷ் உர மூட்டைகள் வந்திருந்தன. பின்னர் இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றினர். 

இதையடுத்து உர மூட்டைகள் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1,900 டன் உரத்தில் 500 டன் உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 1,400 டன் உரம் தனியார் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன

Source : Dailythanthi

No comments:

Post a Comment