Monday, June 13, 2016

இளநிலை வேளாண் படிப்பிற்கு 39,000 பேர் விண்ணப்பம்:துணைவேந்தர் கே.ராமசாமி


இளநிலை வேளாண் படிப்பில் சேர 39,000 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார்.
நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரியில் வேளாண் விளைபொருள்களுக்கான கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதில், பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இளநிலை வேளாண் படிப்பிற்கு இதுவரை 39,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 14 அரசு வேளாண் கல்லூரிகள், 19 தனியார் கல்லூரிகள் என, மொத்தம் 33 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 6 பட்டப் படிப்புகள், 7 தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு மொத்தம் 2,800 இடங்கள் உள்ளன.
தனியார் கல்லூரிகளாக இருந்தாலும், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே கல்லூரிகளில் சேர முடியும். வரும். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் சேர்க்கை முடிவுற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும். மாணவர்கள் கலந்தாய்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Source : dinamani

No comments:

Post a Comment