சிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்
சேவை மையம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா ஒரு சேவை மையம் அமைக்க அரசாணை வழங்கப்பட்டுஉள்ளது. இந்த சேவை மையங்களின் மூலம் அந்தந்த வட்டார அளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களுக்குத் தேவையான வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் எந்திரங்களின் தொகுப்பினை விவசாய குழு அல்லது நிறுவனத்துக்கு வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படும்.
இந்த சேவை மையங்களை முன்னோடி விவசாயி அல்லது விவசாய குழுக்கள் வேளாண் பொறியியல் துறையின் வழிகாட்டுதலுடன் தங்கள் பொறுப்பில் அமைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட சேவை மையங்களில் அந்தந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களுக்கு தேவையான எந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக ரூ.25லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை வாங்கவும், எந்திரத்தின் மதிப்பீட்டில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. எனவே அரசு மானியத் தொகை ரூ.10 லட்சம் போக மீதம் உள்ள பங்களிப்பு தொகையான ரூ.15 லட்சத்தினை முதலீடு செய்தால் மட்டும் போதுமானதாகும். இதன் முதற்கட்டமாக ஏற்கனவே 2015-16-ம் ஆண்டில் சாக்கோட்டை, தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் வாடகை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
9 ஒன்றியங்கள்
நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், சிங்கம்புணரி, திருப்பத்தூர் மற்றும் எஸ்.புதூர் ஆகிய 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. மேற்கண்ட மானிய திட்டத்தின் மூலம் சேவை மையம் அமைக்க விரும்பும் முன்னோடி விவசாயிகள், விவசாய குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த விண்ணப்பங்கள் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணைத் திட்ட குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு செயற் பொறியாளர், (வேளாண்மை பொறுப்பு), வேளாண்மைப் பொறியியல் துறை, சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகம், தொலைபேசி எண் 04575-240213 உதவி செயற் பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு), வேளாண்மை பொறியியல் துறை, தொண்டி ரோடு, சிவகங்கை. தொலைபேசி எண் 04575-240288, உதவி செயற் பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு), வேளாண்மைப் பொறியியல் துறை, புகழேந்தி தெரு, சூடாமணிபுரம், காரைக்குடி ஆகிய முகவரியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகி பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Source : Dailythanthi
No comments:
Post a Comment