குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் புதிய ரோபோவை வடிவமைத்துள்ளனர். 10 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ, தோட்டங்களில் விதைகளை தேர்வு செய்தல், தேர்வு செய்த விதைகளை நடுதல், நீர் தெளித்தல், உரமிடல், களைக்கொல்லி தெளித்தல் போன்ற பணிகளை செய்கிறது. அல்ட்ராசானிக் தொழில் நுட்பத்தை கொண்ட இந்த ரோபோ, தனது இயக்கம், கருவிகளில் ஏற்படும் பழுதினை தானாகவே சரிசெய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளதால், சூரிய ஒளியில் இயங்கும். சூரிய ஒளி கிடைக்காத நேரத்தில், சேமித்து வைத்துள்ள மின் கலனிலிருந்து தேவையான மின் சக்தியை பெற்று இயங்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. விவசாயம் உடல் உழைப்பு மிக்க கடுமையான தொழிலாக இருப்பதால், படித்த இளைஞர்கள் இதில் ஈடுபட தயங்குகின்றனர். இது போன்ற இயந்திரங்கள் இந்த துறையில் புகுத்தப்படுவதால், படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட முடியும்.
உதவி பேராசிரியர் ராம்பிரகாஷ் மேற்பார்வையில் மாணவர்கள் எழிலரசன், ஜஸ்வின் பிரஜிஷ், கார்த்திக், சவுந்தர் ஆகியோர் இதை வடிவமைத்துள்ளனர். இதற்கான ஆலோசனைகளை துறைத்தலைவர் அருள்முருகன், ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பவளம் ஆகியோர் வழங்கினர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பை, கல்லூரியின் தலைவர் டாக்டர் நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், முதல்வர் பழனிசாமி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
Source : Dinakaran

No comments:
Post a Comment