Friday, June 24, 2016

600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு


கைத்தண்டலம் கிராமத்தில், 600 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள வேளாண் பண்ணையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி பார்வையிட்டு, 601வது மரமாக பன்னீர் பூ மரத்தை நட்டு, பாராட்டினார். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்துள்ளது கைத்தண்டலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி மாசிலாமணி, 45, என்பவர் தனக்கு சொந்தமான, 10 ஏக்கர் பரப்பு நிலத்தில், 2009ம் ஆண்டு முதல், பல வகையான மூலிகை மரம் மற்றும் செடிகளை பயிரிட்டு பராமரித்து வருகிறார்.

இந்த வேளாண் பண்ணையில், சந்தனம், செஞ்சந்தனம், வேங்கை, வில்வம், மகாவில்வம், வன்னி, பதிமுகம், நாகலிங்கம், ரோசொட்டு, சிசுமரம், மகிழமரம் மற்றும் ஆப்பிள், உத்திராட்ச மரம், போதி மரம், திருவோடு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் உள்ளன.
இதே போல கருந்துளசி, காட்டாமணக்கு, கடல் அத்தி, கருநொச்சி, பாக்கு, வாகநாரம், கருந்தொண்ணை, கல்யாண முருங்கை, வெள்ளருக்கு, திருவாட்சி, தோதகத்தி, புன்னை, இளமஞ்சு போன்ற மருத்துவ குணம் கொண்ட செடி வகைகளும், பாரிஜாதம், பவளமல்லி, மனோரஞ்சிதம் போன்ற மலர் வகைகளும், செர்ரி, புதுவை பலா ஆகிய பழ வகை மரங்கள், வெற்றிலை,
காப்பி உள்ளிட்ட செடிகளும் வளர்க்கப்படுகின்றன.

Source : Dinamalar

No comments:

Post a Comment