Monday, May 30, 2016

விலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட "ஹெர்போலிவ்' பயன்படுத்தலாம்: உதவி இயக்குநர் தகவல்

வேளாண் பயிர்களை எலி, காட்டுப்பன்றி, காட்டு பறவைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தலாம் என்று அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், மணிலா மற்றும் கரும்பு பயிர்களில் எலியின் பாதிப்பு, காட்டுப்பன்றி மற்றும் காட்டுப் பறவைகளின் அழிவிலிருந்து பாதுகாக்கவும், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தி பயன் பெறலாம். இந்த மருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் சான்றளிக்கப்பட்ட மருந்தாகும்.இது எலியின் தாக்கத்தில் இருந்து பயிரை பாதுகாக்கிறது. இந்த மருந்தை பயன்படுத்துவதால், நிலத்தின் சத்துக்கள் அதிகமாகிறது.
நீர்பிடிக்கும் தன்மை மற்றும் நீர் தேங்கினால் பயிர் கெடாமல் இருக்கவும் செய்கிறது. விளை பொருள்களில் உள்ள உயிர் சத்துக்கள் உடலுக்கு அதிகமாக கிடைக்கச் செய்கிறது. விளை பொருள்களின் இருப்பு தன்மை அதிகரிக்கிறது.
ஹெர்போலிவ் மருந்தை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் மருந்துடன் 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் தகவல் அறிய விரும்பும் விவசாயிகள் 98423 17805 செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment