Thursday, May 19, 2016

உழைப்பே மூலதனம்!

'உண்மை, உழைப்பு, நம்பிக்கை மீது நட்பு கொண்டிருந்தால் போதும். அவர்களை தொழில் முனைவோராக மாற்றி காட்டுவோம். குறுகிய காலத்தில் தொழிலதிபர்களாக உருவாக்குவோம். 
முறையாக பயிற்சி எடுத்து தொழிலில் ஈடுபட்ட எண்ணற்றோர் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்,' என்கிறது மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம். இப்பல்கலை சார்பில் மனையியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாதம் தோறும் வணிக முறையிலான பொருட்கள் தயாரிப்பு குறித்து மனையியல் விரிவாக்கத்துறை குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறது. தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பிரட் மற்றும் ஜாம் தயாரிப்பு, குக்கீஸ் வகைகள், ஊறுகாய் தயாரிப்பு, பழங்களில் பொருட்கள் தயாரிப்பு போன்ற எண்ணற்ற பயிற்சிகளை ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என தொழிலுக்கு ஏற்ப பயிற்சியை அளிக்கிறது.
தலைவர்
மனையியல் விரிவாக்கத்துறை
மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண் பல்கலை., மதுரை
0452- 242 4684


Source : dinamalar

No comments:

Post a Comment