Tuesday, May 17, 2016

திண்டுக்கல்லில் 2ம் கட்டமாக மண்வள அட்டை வழங்க திட்டம்


திண்டுக்கல்லில் எல்லா விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க, மண் மாதிரிகள் ஆய்வு செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் தேசிய மண்வள அட்டை இயக்கம் செயல்பட்டு வருகிறது. மண்வளம் அறிதல், மண்ணில் உள்ள சத்துக்களின் விவரங்களை அட்டவணைப்படுத்தி, என்ன பயிர் வகைகள் விளைவிக்கலாம் என்பதை குறிக்கும் மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மண்ணின் தன்மையை அறிந்து விவசாயிகள் நிலத்திற்கு ஏற்ற சத்துடைய உரங்களை இடலாம்.
மண் மாதிரிகளை ஆய்வு செய்து அதன் தன்மையை ஜி.பி.எஸ்., மூலம் எல்லோரும் அறிந்து கொள்ள கணினியில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நீர் மற்றும் நீரற்ற நிலபரப்பு என
பல்வேறு இடங்களில் மண் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 540 மண்மாதிரி சோதனை செய்யப்பட்டு மண்வள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2ம் கட்ட மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, எல்லா விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source : Dinamalar

No comments:

Post a Comment