Sunday, January 17, 2016

உலக ஆயுர்வேத திருவிழா; இம்மாத இறுதியில் கேரளாவில் நடக்கிறது



கோழிக்கோடு,

3-வது உலக ஆயுர்வேத திருவிழா இம்மாத இறுதியில் கேரளாவின் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கேரள ஆயுர்வேத கண்காட்சியை அம்மாநிலம் முழுவதும் இன்று முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேதம் குறித்த கருத்தரங்குகள், சாலை பிரச்சாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்கள் ஆகியவை இன்று முதல் வரும் 28-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உலக ஆயுர்வேத திருவிழாவில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், மத்திய ஆசிய நாடுகள், சீனா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, செர்பியா, இலங்கை, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களில், மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரும் அடங்குவர்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இந்த ஆயுர்வேத திருவிழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

source : Dailythanthi

No comments:

Post a Comment