Sunday, January 24, 2016

விவசாயத்தில் மின்சிக்கனத்தை வலியுறுத்தும் "கிசான் மேளா'


விவசாயத்தில் மின்சிக்கனத்தை வலியுறுத்தும் முறைகள் குறித்த சிறப்பு முகாம்களை கிராமங்கள் தோறும் காந்தி கிராம பல்கலையின் கிராம எரிசக்தி மையம் நடத்தி வருகிறது.
இந்தியாவில் தொழில்துறைக்கு பின் விவசாய துறையில் தான் அதிகளவில் எரிசக்தி பயன்படுகிறது. மின்சாரம் மற்றும் திரவ எரிபொருள்களை பயன்படுத்தி நடவுசெய்தல், களை எடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அறுவடை பணிகள் நடக்கின்றன.
சிறப்பு முகாம்கள்: சென்னையில் உள்ள பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம், காந்தி கிராம பல்கலை கிராமிய எரிசக்தி மையம் இணைந்து "கிசான் மேளா' திட்டத்தில் சிறப்பு மின்சார சிக்கன முகாம்களை நடத்தி வருகிறது. இம் முகாம்கள் மூலம் 25 சதவீத எரிபொருட்களை சேமிக்கலாம், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் குறைக்கலாம் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், விவசாய பம்பு மற்றும் டிராக்டர் பயன்பாட்டில் எரிபொருளை எவ்வாறு சேமிப்பது என துண்டு பிரசுரங்களை வினியோகிக்கின்றனர். இதற்கான சிறப்பு கண்காட்சிகளுடன், குறும்படமும் திரையிடப்படுகிறது.
கிராமிய எரிசக்தி மைய பேராசிரியர் கிருபாகரன், தொழில்நுட்ப உதவியாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: விவசாயிகள் மிக எளிதான நடவடிக்கைகள் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். தகுதியான மின் மோட்டார் தேர்வு செய்தல், அடிக்கடி பெல்ட் இழுவை திறனை சோதித்தல், தண்ணீர் குழாய்களில் தேவையில்லாத வளைவுகளை தவிர்த்தல், உராய்வை குறைக்கும் எண்ணெய் பயன்படுத்துவது, சொட்டு நீர்ப்பாசன முறை போன்றவற்றை பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறோம், என்றனர்.

source : Dinamalar

No comments:

Post a Comment