Friday, January 29, 2016

தோவாளை மார்க்கெட்டில் முல்லை பூ விலை ரூ.800 உயர்வு ஒரு கிலோ ரூ.1000–க்கு விற்பனை


நாகர்கோவில்,
தோவாளை பூ மார்க்கெட்டில் முல்லை பூ விலை நேற்று ரூ.800 உயர்ந்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ.1000–க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூ மார்க்கெட்நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி நெல்லை, மதுரை உள்பட பல இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
விவசாயிகள் அதிகாலையிலேயே பூக்களை கொண்டுவருவதால், வியாபாரிகளும் அதிகாலையிலே மார்க்கெட்டிற்கு வந்துவிடுவார்கள். இதனால் அதிகாலையிலோ வியாபாரம் தொடங்கிவிடும். பூக்கள் இங்கு சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படும். இதனால் மார்க்கெட் அதிகாலையில் இருந்து பரபரப்பாக இருக்கும்.
முல்லை விலை உயர்வுஇந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.200–க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ, நேற்று விலை ரூ.800 உயர்ந்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ.1000–க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை பூவின் விலை உயர்வு குறித்து பூ வியாபாரி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘ இன்று (நேற்று) வெள்ளிக்கிழமை என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் முல்லை பூவின் தேவை அதிகமாக இருந்தது. அதே சமயம் முல்லை பூவின் வரத்து மார்க்கெட்டிற்கு குறைவாக இருந்தது. இதனால் குறைந்த அளவில் இருந்த பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். இதனால் தான் விலை உயர்ந்து காணப்பட்டது’’ என்று கூறினார்.
விலை விவரம்மேலும், மற்ற பூக்களின் விலை விவரம் வருமாறு:– பிச்சி ரூ.1400–க்கும், மல்லிகை ரூ.1000–க்கும், கனகாம்பரம் ரூ.350–க்கும், ஸ்டெம்புரோஸ் ரூ.120–க்கும், மருக்கொழுந்து ரூ.100–க்கும், வெள்ளை சிவந்தி ரூ.100–க்கும், பட்டன்ரோஸ் ரூ.90–க்கும், கொழுந்து ரூ.80–க்கும், சம்பங்கி ரூ.80–க்கும், அரளி ரூ.40–க்கும், வாடாமல்லி ரூ.40–க்கும், கேந்தி ரூ.30–க்கும், துளசி ரூ.25–க்கும், மஞ்சள்கேந்தி ரூ.15–க்கும், மாம்பழ கேந்தி ரூ.10–க்கும், பச்சை ரூ.6–க்கும், தாமரை (100 எண்ணம்) ரூ.200–க்கும், ரோஜா (100 எண்ணம்) ரூ.30–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Source : Dailythanthi

No comments:

Post a Comment