வேர் முடுச்சுகளில் நைட்ரஜனை சேமிக்கும் பயறுவகைகளை பயிட்டால் மண் வளம் பாதுகாக்கப்படும் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், பரமக்குடி, நயினார்கோவில், கீழக்கரை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மட்டுமே உளுந்து, தட்டை, மின்னி, துவரை போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்கின்றனர்.
மற்ற பகுதிகளில் தொடர்ந்து நெல் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்கின்றனர். ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் நிலங்களில் உள்ள குறிப்பிட்ட சத்துக்கள் குறைகின்றன. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைவு ஏற்படுகிறது.
வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரே வகை பயிரை தொடர்சியாக பயிரிட்டால் மண்வளம் பாதிக்கும். நெல் அறுவடைக்கு பின் உளுந்து, தட்டை, மின்னி உள்ளிட்ட பயறு வகைகளை சாகுபடி செய்யலாம். பயறு வகை செடிகள் வேர் முடுச்சுகளில் நைட்ரஜன் சத்துக்களை சேமித்து வைக்கின்றன. இதனால் மண்வளம் மேம்படுகிறது. மறுமுறை நெல் பயிரிடும்போது நல்ல மகசூல் கிடைக்கிறது, என்றார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment