Sunday, January 17, 2016

தேயிலை உற்பத்தியில் உலகிலேயே 2-வது இடத்தில் இந்தியா!



மும்பை,

உலக அளவில் தேயிலையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. எகிப்து, பாகிஸ்தான், பிரிட்டன் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சிடிசி கிரேடு தேயிலை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு ஆர்தோடக்ஸ் ரக தேயிலையும் ஏற்றுமதியாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி 1.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தேயிலை உற்பத்தி 3.9 சதவீதம் அளவுக்கு 106.88 மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் 17.3 சதவீதம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. 

Source : Dailythanthi

No comments:

Post a Comment