Sunday, January 17, 2016

இருமலை போக்கும் டிசம்பர் பூக்கள்

இருமல், சளியை போக்க கூடியதும், உடல் வலியை சரிசெய்யும் தன்மை கொண்டதும், விஷக்கடிக்கு மருந்தாவதும், கல்லீரலை  பாதுகாக்க கூடியதுமான டிசம்பர் பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி நாம் பார்ப்போம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூத்துக்  குலுங்கும் மலர் டிசம்பர் பூ. 

இந்த செடியில் வென்னிறம், நீலம், செந்நிற பூக்கள் இருக்கும். வீடுகள், தோட்டங்களில் வளரக்கூடியது. கனகாம்பரம் வகையை  சார்ந்தது. இதன் பூக்கள், இலைகள், வேர்கள் மருத்துவ குணங்களை கொண்டது. டிசம்பர் பூவானது விஷக்கடிக்கு மருந்தாகிறது.  சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கூடியது. ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்ட டிசம்பர் பூ புத்துணர்வு தரக்கூடியது. இருமலை  போக்கும் சக்தியை பெற்றது. சளியை கரைக்கும். வீக்கத்தை குறைக்க கூடியது.இதன் இலைகள், பூக்களை பயன்படுத்தி காய்ச்சல்,  உடம்பு வலியை  போக்கும் மருந்து தயாரிக்கலாம். 



 Cough, mucus, may alleviate physical pain, with adjustment, to visakkati maruntavatum, and could protect the liver
தேவையான பொருட்கள்: 

டிசம்பர் பூ, இலைகள், 
பனங்கற்கண்டு. 

சிறிது இலைகளுடன், 15 பூக்கள் வரை சேர்க்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு  டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 முதல் 100 மில்லி எடுத்துக் கொள்ளலாம். இது, சளியோடு கூடிய  இருமல், அடிக்கடி தொல்லை தரும் இருமலை போக்கும். உடல் வலி சரியாகும். கல்லீரல் பாதிப்பை தடுக்கும். ஈரலை சீராக  செயல்பட வைக்கும்.
  
டிசம்பர் பூவின் இலை மற்றும் வேரை பயன்படுத்தி சளி, இருமல், ரத்தசோகைக்கான மருந்து தயாரிக்கலாம். சிறிது இலைகள், வேர்ப்பட்டையுடன் சுக்குப்பொடி, நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி தேன் சேர்த்து குடித்தால், பல் வலி  சரியாகும். சளி, இருமல் மற்றும் ரத்தசோகை குணமாகும்.
 
டிசம்பர் பூவின் விதைகளை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மருந்து தயாரிக்கலாம். விதைகளுடன் சிறிது மிளகு பொடி, ஒரு  டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், பூச்சி கடியால் ஏற்படும்  விஷம் முறியும்.
 
விதையை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். டிசம்பர் பூவின் விதைகளை நசுக்கி எடுத்துக்  கொள்ளவும். அதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து, நீர்விட்டு குழைத்து பூச்சிக்கடி உள்ள இடத்தில் மேல்பத்தாக போடவும்.  பூச்சிக்கடி விஷத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தடுக்கிறது.
  
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட டிசம்பர் பூவின், இலை மற்றும் விதையை கொண்டு தயாரிக்கப்படும் தேனீரானது,  சிறுநீர் பெருக்கியாக பயன்படுகிறது. ஈரலை பலப்படுத்துகிறது.

Source : Dinakaran

No comments:

Post a Comment