காஞ்சிபுரம்: மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு, உடனடியாக யூரியா போட வேண்டும் என, வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில், அதிகப்படியாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீத்தாராமன் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் உடனடியாக, மடையை திறந்து மழைநீரை வெளியேற்ற வேண்டும். மேலும், நெற்பயிர்கள் பாதிக்காமல் இருக்க, உடனடியாக அவற்றிற்கு யூரியா போட வேண்டும். அப்போதுதான், நெல் பாழாகாமல் வளரும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment