Thursday, November 26, 2015

கொய்யா' வை தாக்கும் தேயிலை கொசு



திண்டுக்கல் :திண்டுக்கல்லில் கொய்யாவை தாக்கும் தேயிலை கொசுவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அமெரிக்காவை தாயகமாக கொண்டது கொய்யா. எல்லா வகையான மண்பாங்கிலும், வறட்சியை தாங்கி வளரக்கூடியது. தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கொய்யாவை அதிகமாக தாக்குபவை தேயிலை கொசு மற்றும் பழத் துளைப்பான்களாகும்.
அறிகுறிகள்: தேயிலை கொசுவின் தாக்குதல் இருந்தால் பிஞ்சுகள் மற்றும் பழங்கள் உதிர்தல் அதிகமாக இருக்கும். பழம் துளைப்பான்புழுக்கள் பழங்களை துளைத்து விதைகளை உண்டு சேதம் விளைவிக்கும். இப்புழுவின் தாக்குதலினால் பழங்களின் தரம் குறைந்து விற்பனை பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தடுக்கும் வழிகள்: வேளாண் துணை இயக்குநர் ராமநாதன் கூறியதாவது:தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி விட வேண்டும். முந்திரி, திராட்சை, வேம்பு பயிர்களுக்கு அருகே பயிரிடுவதை தடுக்க வேண்டும். தேயிலை கொசு தாக்கிய இளம் காம்புகள், பூங்கொத்துகள், உதிர்ந்த பழங்கள் போன்றவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும். 
தேயிலை கொசு தாக்குதல் தென்பட்டவுடன் மாலத்தியான் 0.1 சதவிதம் அல்லது எண்டோசல்பான் 0.03 சதவிதம் மருந்தை கைத்தெளிப்பானில் மரத்தின் எல்லா பாகங்களிலும் படும்படி தெளிக்க வேண்டும். இதன் மூலம் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தி, அதிக லாபம் பெறலாம், என்றார்.


No comments:

Post a Comment