Thursday, November 12, 2015

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கூடுதல் வேளாண் இயக்குனர் ஆய்வு




திருக்கனுார்: செல்லிப்பட்டு கிராமத்தில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை கூடுதல் வேளாண் இயக்குனர் ரவிப்பிரகாசம் பார்வையிட்டார்.
புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக விவசாய பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்தன. குறிப்பாக, வாழை, நெல், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து, முன் னாள் எம்.பி., கண்ணன் தத்தெடுத்துள்ள செல்லிப்பட்டு கிராமத் தில், மழையால் சேதமடைந்த வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை, கூடுதல் வேளாண் இயக்குனர் ரவிப்பிரகாசம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறுகை யில் 'புதுச்சேரியில் மழை யால் பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்து, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் சேதம் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, சேத மதிப்பு கணக்கீடு செய்து அறிக்கையாக அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளோம்' என்றார்.துணை வேளாண் இயக்குனர் முத்துக்கிருஷ் ணன், வேளாண் அலுவ லர் இளந்திரையன், களப்பணியாளர் ஆதிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment