ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பண்ணை குட்டைகள் தெரிவு செய்து, அதில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து, வளர்த்து மீன் பிடிக்கப்படுகிறது. இத் தொழிலில் ஈடுபடும் பயனாளிகளுக்கு, மீன் குஞ்சு இருப்பு, தீவன செலவினம், உரமிடுதல், மீன் பிடிப்பு செலவினம் ஆகியவற்றில், 50 சதவீதம் மானிய உதவியாக வழங்கப்படும். தவிர, தனியார் மீன் பண்ணைகளை ஊக்குவிக்க, ஹெக்டருக்கு, 50,000 ரூபாய் வீதம், 10 ஹெக்டருக்கு மானியம் பெற விண்ணப்பம் செய்யப்பட்டது. இதில் தற்போது, ஐந்து பேருக்கு, 5.8 ஹெக்டர் பரப்புக்கு, 2.55 லட்சம் மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 4.2 ஹெக்டருக்கு விரைவில் வழங்கப்படும். மேலும், இம்மாவட்டத்தில் மீன் பிடித்தலை முழு நேர தொழிலாக செய்து வரும், உள்ளூர் மீனவர்களுக்கு, 50 சதவீத மானிய விலையில், மீன்பிடி வலைகள் வழங்கப்படுகிறது. இதில், ஒரு நபருக்கு 7,500 ரூபாய் வீதம், 182 மீனவர்களுக்கு, 13.65 லட்சம் ரூபாய், இ-சேவை மூலம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு, 2015-16ம் ஆண்டுக்கு, 300 பேருக்கு, மீன்பிடிப்பு வலை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மானிய உதவி கிடைக்கும் என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment