Thursday, November 5, 2015

ஆடுகள் வளர்க்க சிறப்புப் பயிற்சி


குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சியில் ஆடுகள் வளர்க்க சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உபதலை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 33 கிராமங்களைச் சேர்ந்த 220 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, அனைத்து கிராமங்களிலும் இருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளின், வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவர்கள் எனப் பட்டியல் தயாரித்து, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆடுகளை வளர்ப்பது, பராமரிப்பது உள்ளிட்டவை குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் உபதலை கிராமத்திலுள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சித் தலைவர் வே.சிதம்பரம் தலைமை வகித்தார். கால்நடைத் துறை மருத்துவர்கள், ஊழியர்கள், ஆடு வளர்ப்பது தொடர்பாக விளக்கமளித்தனர்.
மேலும், பயிற்சி முகாம் நிறைவடைந்தவுடன் பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. கால்நடைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition_coimbatore/nilgiri/2015/11/06/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/article3116223.ece

No comments:

Post a Comment