சென்னை : தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை தொடங்கியது. வளி மண்டல மேல் அடுக்கில் அப்போதைக்கு அப்போது ஏற்படும் காற்று சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நேற்று கரூரில் 150 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் மீண்டும் வளி மண்டல மேல் அடுக்கில் புதிய காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிைல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment