உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள பயனாளிகள் அரசு நல உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலன் கருதி, அரசு சார்பில் உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர் குடும்பத்துக்கு திருமண உதவித் தொகை, ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, இயற்கை மரண நிவாரண நிதி, விபத்து மரணம் மற்றும் காயத்துக்கு நிவாரண நித வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ், சிவப்பு நிற (மெரூன்) அடையாள அட்டை பெற்றுள்ள பயனாளிகள், அரசு நல உதவிகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment